சாலை பாதுகாப்பு மாத விழா


சாலை பாதுகாப்பு மாத விழா
x
தினத்தந்தி 1 Feb 2021 6:30 AM GMT (Updated: 2021-02-01T12:00:17+05:30)

சாலை பாதுகாப்பு மாத விழா

லால்குடி,
லால்குடி ரவுண்டானா பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா நடந்தது. விழாவிற்கு நெடுஞ்சாலைத்துறை திருச்சி கோட்ட பொறியாளர் வடிவேல் தலைமை தாங்கி சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினார். விழாவில், லால்குடி உதவி கோட்ட பொறியாளர் ஹரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் சோலை முருகன் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், சாலை பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவையொட்டி சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது.
இதுபோல துறையூரில் நெடுஞ்சாலைத் துறையினர், போக்குவரத்து காவல் பிரிவு, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு ஆகியவை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ், மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேந்திரக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story