காதல் போட்டியில் சிறுவன், நண்பருக்கு அடி-உதை


காதல் போட்டியில் சிறுவன், நண்பருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 1 Feb 2021 4:19 PM GMT (Updated: 1 Feb 2021 4:19 PM GMT)

காதல் போட்டியில் சிறுவன், அவனது நண்பரை அடித்து உதைத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வில்லியனூர், பிப்.1-
காதல் போட்டியில் சிறுவன், அவனது நண்பரை அடித்து உதைத்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
காதல் போட்டி
புதுச்சேரி   துப்புராயப்பேட்டை வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். சாரம் பகுதியைச் சேர்ந்தவர்   திலீப்குமார் (வயது23). 
இவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட போட்டியால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் திலீப்குமார், அந்த பெண்ணுடன் தான் இருக்கும் செல்போன் புகைப்படத்தை காட்டி தன்னைத் தான் அந்த பெண் காதலிப்பதாக சிறுவனிடம் கூறியுள்ளார். இதையடுத்து      வி.மண  வெளியில் உள்ள மாணவியின் வீட்டுக்கு சென்ற சிறுவன் அவரது குடும்பத்தினரிடம்    செல்போன்  புகைப் படத்தை காட்டி காதல் விவகாரத்தை  அம்பலப்படுத்தினார்.
நிர்வாணப்படுத்தினர்
இந்தநிலையில் அந்த மாணவியை அவரது குடும்பத்தினர் அடித்து  துன்புறுத்தியதாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்ததும் திலீப்குமார் ஆத்திரமடைந்து சிறுவனையும், அவனது      நண்பரையும் தட்டாஞ்சாவடி பாப்ஸ்கோ அலுவலகம் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடத்திச் சென்றார்.      அங்கு    திலீப்  குமாரின் நண்பர்களான சாரம் கார்த்திகேயன் (27), உருளையன்பேட்டை முகமது ரபிக் (26) ஆகியோரும் அங்கு வந்து சேர்ந்தனர். சிறுவனையும், அவனது நண்பரையும் அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து அவர்களை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதுகுறித்து வில்லியனூர் போலீசில் சிறுவன் புகார் செய்ததன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப்குமார், கார்த்திகேயன், முகமது ரபிக் ஆகிய 3 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story