மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 67 லட்சம் செலவில் புதிய தடுப்பணை


மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 67 லட்சம் செலவில் புதிய தடுப்பணை
x
தினத்தந்தி 1 Feb 2021 4:53 PM GMT (Updated: 2021-02-01T22:26:19+05:30)

தியாகதுருகம் அருகே உள்ள மணிமுக்தா ஆற்றின் குறுக்கே ரூ.8 கோடியே 67 லட்சம் செலவில் புதிய தடுப்பணை கட்டும் பணியை பிரபு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே உள்ள கண்டாச்சிமங்கலம் ஊராட்சியில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தனர்.

 இதுபற்றி கள்ளக்குறிச்சி பிரபு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

அதன்படி தமிழக அரசு மணிமுக்தா ஆற்றின் குறுக்கே 140 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் உயரமும் கொண்ட சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொள்ளும் வகையில் தடுப்பணை அமைக்க ரூ.8 கோடியே 67 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. 

தொடக்கவிழா

இதையொட்டி தடுப்பணை கட்டும் பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் மேற்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பா, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் பாஷா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி துணை செயலாளர் ரமேஷ் வரவேற்றார். 

நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

Next Story