கார் பள்ளத்தில் கவிழ்ந்தது


கார் பள்ளத்தில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 1 Feb 2021 5:10 PM GMT (Updated: 1 Feb 2021 5:10 PM GMT)

விசாரணை கைதியை அழைத்து சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்

பேரையூர்
டி.கல்லுப்பட்டி அருகே விசாரணை கைதியை அழைத்து சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் அழைத்து சென்றனர்
திருப்பூர் ஊரக ேபாலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் செல்லத்துரை (வயது 55). அதே போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக இருப்பவர் ராஜ்கமல். இவர்கள் 2 ேபரும் திருட்டு வழக்கு ெதாடர்பாக தென்காசி பொட்டல்புதூர் என்ற ஊரில் உள்ள அசன் அலி என்பவரை தேடி கார் ஒன்றில் புறப்பட்டனர். 
இவர்களுடன் புகார்தாரர் ஹாரிஸ் முகமது என்பவரும் காரில் சென்றார். அங்கு திருட்டு வழக்கில் தொடர்புடைய அசன் அலி என்பவரை கைது செய்து அழைத்துக்கொண்டு திரும்பவும் காரில் அதிகாலையில் திருப்பூர் சென்று கொண்டிருந்தனர். காரை அஷரப் என்பவர் ஓட்டினார்.
மீட்பு பணி
இந்த கார் மதுரை-ராஜபாளையம் சாலையில் டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள குன்னத்தூர் அருகே பாலத்தில் வந்து ெகாண்டிருந்தது. அப்போது திடீரென நிலைதடுமாறி பாலத்தின் கீழ் உள்ள பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை, முதல்நிலை காவலர் ராஜ்கமல், டிரைவர் அஷரப் மற்றும் காரில் இருந்த முகமது ஹாரிஸ், விசாரணை கைதி அசன் அலி, ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அதிகாலை நேரம் என்பதால் முதலில் என்ன நடந்தது என தெரியவில்லை. 
காருக்குள் இருந்தவர்கள் கூச்சல் போட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ேகாயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். இந்த விபத்து குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story