அஞ்செட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி குரங்கு பலி: டிரைவர், கண்டக்டருக்கு அபராதம்


அஞ்செட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி குரங்கு பலி: டிரைவர், கண்டக்டருக்கு அபராதம்
x
தினத்தந்தி 1 Feb 2021 11:26 PM IST (Updated: 1 Feb 2021 11:28 PM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பிலிகுண்டுலு வழியாக கர்நாடக அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பஸ்சை நிறுத்தி சாலையோரம் இருந்த குரங்குகளுக்கு வாழைப்பழங்களை கொடுத்தனர். பின்னர் டிரைவர் பஸ்சை எடுத்த போது ஒரு குரங்கு சக்கரத்தில் சிக்கி இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனச்சரகர் சீதாராமன் தலைமையிலான வனத்துறையினர் கர்நாடக அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு ரூ.7ஆயிரம் அபராதம் விதித்தனர்.
1 More update

Next Story