கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

கரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்
கரூர் மாவட்ட நெடுங்சாலை துறை சார்பில் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 17 வரை 31-வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கரூரில் சாலைபாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கரூர் உதவி கோட்ட பொறியாளர் மங்கையர்கரசி தொடாங்கி வைத்தார். கரூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஸ் நிலையம், லைட்ஹவுஸ், ஜவகர்பஜார் வழியாக சென்று மீண்டும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் வரை நிறைவு பெய்யது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். இதில், உதவி பொறியாளர் கர்ணன், கோபிநாத், சாலை ஆய்வாளர்கள், சாலை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story