விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் பலி


விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 1 Feb 2021 6:00 PM GMT (Updated: 1 Feb 2021 6:00 PM GMT)

மதுரை அருகே விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்

நாகமலைபுதுக்கோட்டை
மதுரை அருகே விபத்தில் முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
லாரி மோதியது
மதுரை செக்கானூரணி அருகே உள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் கோபு(வயது 47). இவரும் இதே பகுதியை சேர்ந்த புண்ணியமூர்த்தி(50) என்பவரும் நேற்று நாகமலைபுதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பஸ் இவர்கள் மீது உரசி விட்டு சென்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் கீழே விழுந்தனர். அப்போது இவர்கள் மீது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த கோபு, புண்ணியமூர்த்தி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசமானது. 
முன்னாள் கவுன்சிலர்
விபத்து குறித்து நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வசந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பலியான கோபு தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story