பொன்னமராவதி, திருமயத்தில் அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்


கும்பாபிஷேகம்
x
கும்பாபிஷேகம்
தினத்தந்தி 1 Feb 2021 11:58 PM IST (Updated: 1 Feb 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே உள்ள அமரகண்டான் மேல் கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

பொன்னமராவதி:

பொன்னமராவதி பஸ் நிலையம் எதிரே உள்ள அமரகண்டான் மேல் கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 30-ந்தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து 4 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் சரவணன் குருக்கள் தலைமையில், கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க துர்க்கை அம்மன் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமயம் அருகே உள்ள வாரியபட்டி கிராமத்தில் லாவண்டை அம்மன் கோவில் உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாக சாலை பூைஜகள் நடைபெற்றது. நேற்று யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோவிலை வலம் வந்தனர். பின்னர் காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க லாவண்டை அம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை வாரியபட்டி, கொள்ளகாட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
1 More update

Next Story