முனியப்பசாமி கோவிலில் விடிவிடிய அபிஷேக ஆராதனை


முனியப்பசாமி கோவிலில் விடிவிடிய அபிஷேக ஆராதனை
x
தினத்தந்தி 1 Feb 2021 6:35 PM GMT (Updated: 2021-02-02T00:05:58+05:30)

முனியப்பசாமி கோவிலில் விடிவிடிய அபிஷேக ஆராதனை நடந்தது.

நொய்யல்:
நொய்யல் அருகே குளத்துப்பாளையத்தில் ஏரிமேட்டு முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஒவ்வொரு வருடமும் புதிதாக ஏரிமேட்டு முனியப்ப சுவாமி சிலை உருவாக்கப்பட்டு வேட்டமங்கலத்தில் வைத்து முனியசாமிக்கு கண்திறந்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருடா வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் ஏரி மேட்டு முனியப்பசாமி சிலை நொய்யலில் சிற்பிகளால் உருவாக்கப்பட்டுசிலை வேட்டமங்கலத்திற்கு கொண்டு வந்து வைத்து அங்கு டிராக்டரில் சப்பாரம் செய்து அதில் முனியப்ப சாமி சிலையை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட சிலையை வேட்டமங்கலத்திலிருந்து சப்பாரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள கோவிலுக்கு கொண்டு வந்தனர். சிலையை பக்தர்கள் எடுத்து வந்து கோவிலில் வைத்தனர். அங்கு ஏரிமேட்டு முனியப்ப சாமிக்கு நள்ளிரவு 12 மணி அளவில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சேவல்கள் பலி கொடுக்கப்பட்டு பின்னர் சேவல்களை சமைத்தனர்.அதனை தொடர்ந்து ஏரிமேட்டு முனியப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் விடிய விடியநடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story