பா.ஜ.க. பிரமுகர் உருவபொம்மை எரிப்பு


பா.ஜ.க. பிரமுகர் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2021 6:39 PM GMT (Updated: 2021-02-02T00:09:23+05:30)

பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

காரைக்குடி,

மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய பா.ஜ.க. பிரமுகர் கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி காரைக்குடி  புதுவயல் மேட்டுக்கடை பகுதியில் எஸ்.டி.பி.ஐ., தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலாளர் கமருதீன் தலைமை தாங்கினார். இதில் அப்பகுதி ஜமாத் தலைவர் ஷாஜஹான், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சகுபர் சாதிக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முகமது பயாஸ், எஸ்.டி.பி.ஐ. நகரச் செயலாளர் சேக் அப்துல்லா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கல்யாணராமனின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

Next Story