நவசக்தி சங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்


நவசக்தி சங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 2 Feb 2021 12:09 AM IST (Updated: 2 Feb 2021 12:09 AM IST)
t-max-icont-min-icon

நவசக்தி சங்கு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தா.பழூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வாணிய தெருவில் உள்ள நவசக்தி சங்கு விநாயகர் கோவிலின் கட்டுமான பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் முதல் கால யாக பூஜை தொடங்கி தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் கடம் புறப்பாடு நடைபெற்று, சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். தமிழ் பதிகங்கள் முழங்க கலசத்திற்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதில் தா.பழூர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 More update

Next Story