மோட்டார்சைக்கிள்கள் மோதல்;நில புரோக்கர் பலி


மோட்டார்சைக்கிள்கள் மோதல்;நில புரோக்கர் பலி
x
தினத்தந்தி 1 Feb 2021 6:39 PM GMT (Updated: 2021-02-02T00:11:55+05:30)

நாமக்கல்லில் மோட்டார்சைக்கிள்கள் மோதியதில் கீழே விழுந்த நில புரோக்கர் அரசு பஸ் ஏறியத்தில் உடல்நசுங்கி இறந்தார்.

நாமக்கல்:

பரமத்திவேலூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 45). நில புரோக்கர். இவரும், பொத்தனூரை சேர்ந்த குமார் (60) என்பவரும் நேற்று பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் நாமக்கல் வந்தனர். 
நாமக்கல்- சேலம் சாலையில் இருந்து பஸ் நிலையம் நோக்கி வந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிளும், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதி கொண்டன. 

விசாரணை

இந்த விபத்தில் சாலையில் விழுந்த பூபதி மீது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று ஏறியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதேபோல் பின்னால் அமர்ந்து பயணம் செய்த குமாரும் படுகாயம் அடைந்தார். 

அவர் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story