ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Feb 2021 6:41 PM GMT (Updated: 1 Feb 2021 6:42 PM GMT)

ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினாா்கள்.

தாமரைகுளம்,
ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் தொழிலாளர்கள், அரியலூர் ரெயில் நிலையத்தில் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். கிளை தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் கார்த்தி, துணைச் செயலாளர் ரகுஅருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராகவும், ரெயில்வே துறையில் பணிமனைகள் மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், 30 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், 252 ரெயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, ரெயில்வே நிலையங்களை தனியாருக்கு விற்பது, குத்தகைக்கு விடுவது என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Next Story