பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்- பெற்றோர் சாலை மறியல்


பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்- பெற்றோர் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Feb 2021 7:53 PM GMT (Updated: 1 Feb 2021 7:53 PM GMT)

வயலூரில் பள்ளி தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மங்களமேடு,

தலைமை ஆசிரியை
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலூரில் செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 265 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளன.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக பணிபுரிபவர் வாசுகி. இவர் கடந்த 25 ஆண்டுகளாக இந்த பள்ளியில் ஆசிரியராகவும், பின்னர் தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளி நிர்வாகத்திற்கும், தலைமை ஆசிரியைக்கும் பிரச்சினைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே பள்ளி நிர்வாகம், தலைமை ஆசிரியை வாசுகிக்கு பதிலாக, புதிய தலைமை ஆசிரியரை நியமிக்க ஏற்பாடு செய்தனர்.
சாலை மறியல்
இதை கண்டித்து, தலைமை ஆசிரியையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வயலூரில் அரியலூர் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார், பள்ளி நிர்வாகம் மற்றும் தலைமை ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story