சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது; ராதிகா சரத்குமார் பேச்சு


சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது; ராதிகா சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 2 Feb 2021 4:58 AM IST (Updated: 2 Feb 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு இல்லாமல் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாது என்று ராதிகா சரத்குமார் கூறினார்.

பாடுபட இருக்கிறேன்...
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு வடக்கு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் இதுவரை எனது தொழில் காரணமாக அரசியலில் முழுமையாக ஈடுபடவில்லை. ஆனால் இந்த தேர்தலில், சின்னத்திரை நெடுந்தொடர்களில் நடிப்பதை குறைத்து உங்கள் தலைவரின் வெற்றிக்காக பாடுபட இருக்கிறேன். தேர்தல் காலத்தில் கடினமாக உழைக்க வேண்டும்.

மாற்றம்
உழைப்பால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். வரும் சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது என்ற மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் கூறினார்.
முன்னதாக கூட்டத்தில், கட்சியின் தலைவர் சரத்குமார் அல்லது மகளிர் அணி செயலாளர் ராதிகா சரத்குமார் அந்தியூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 More update

Next Story