தூத்துக்குடி: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 12:42 PM GMT (Updated: 2 Feb 2021 12:42 PM GMT)

தூத்துக்குடியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் நம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். 2020-21-ம் ஆண்டில் பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் உடனடியாக காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். 2018-19, 2019-20-ம் ஆண்டில் நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் கணபதி, தூத்துக்குடி ஒன்றிய தலைவர் சங்கரன், கருங்குளம் ஒன்றிய தலைவர் சின்னத்துரை, செயலாளர் மணி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் பொன்ராஜ், கருங்குளம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் பெருமாள், ராமசாமி, செந்தட்டியாபிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story