தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 4:44 PM GMT (Updated: 2 Feb 2021 4:44 PM GMT)

தூத்துக்குடியில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிதம்பரநகர் அருகே தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.

 போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் அல்போன்ஸ் லிகோரி, சாந்த குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். 

சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ரசல், அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் முத்துசாமி, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சாம்பசிவன் ஆகியோர் பேசினர்.

கோரிக்கை

போராட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகை, அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் அந்தோணியம்மாள் நன்றி கூறினார்.

இதேபோல் கோவில்பட்டியில் நடந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் .ஜெகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை தலைவர் என்.முனியாண்டிசாமி தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணை தலைவர் சுப்பிரமணியன், வட்ட செயலாளர் ராமலிங்கம், வட்ட துணை தலைவர் .பார்த்தசாரதி ஆகியோர் பேசினர். வட்ட பொருளாளர் ராமச்சந்திரன், விளாத்திகுளம் வட்ட பொருளாளர் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் பொன்.பரமானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story