ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 2 Feb 2021 5:41 PM GMT (Updated: 2 Feb 2021 5:41 PM GMT)

பெரம்பலூர் அருகே காட்டாற்றில் ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 70-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இதனிடையே மாவட்டத்தில் உள்ள லாடபுரம் ஏரி சமீபத்தில் பெய்த மழை காரணமாக நிரம்பியது. மேலும் இந்த ஏரியில் இருந்து வழிந்து வெளியேறும் தண்ணீர் காட்டாற்று ஓடைவழியாக தான் வரும். இதனிடையே தனிநபர் ஒருவர் ஆற்றின் கரைப் பகுதிகளில் தென்னைமரங்களை நட்டு ஆக்கிரமித்து இருந்தார். இதுகுறித்து பல முறை கூறியும் ஆக்கிரமிப்பை அந்த நபர் அகற்றிக் கொள்ளவில்லை. இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள்   பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Next Story