தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை


தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
x
தினத்தந்தி 2 Feb 2021 7:28 PM GMT (Updated: 2021-02-03T00:58:55+05:30)

வாணியம்பாடியில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அமைச்சர் நிலோபர்கபில் வழங்கினார்

வாணியம்பாடி,

வாணியம்பாடி நகராட்சி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியம் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள தொழிலாளர்களை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடல்உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியம் உள்ளிட்ட 15 வாரியங்களில் உறுப்பினர்களாக சேர்க்க கடந்த 2 மாதங்களாக சிறப்பு முகாம்கள் அந்தந்த பகுதியில் நடத்தப்பட்டது. இதில் தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. 

இந்தநிலையில் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பஷிராபாரத், ஜாகிராபாத் பகுதிகளை சேர்ந்த 568 தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி பஷிராபாத் பகுதியில் நடைபெற்றது. நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கத் தலைவர் அப்துல்சுபான், நாட்டறம்பள்ளி கூட்டுறவு சங்க துணைதலைவர் டி.சாம்ராஜி முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கான அட்டைகளையும், பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் கிளை செயலாளர் அப்துல்லாபாஷா, நிர்வாகிகள் ஷக்ரியா, காலாநிசார், அக்பர்பாஷா, தொழிலாளர் நல வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story