விருத்தாசலத்தில் பஸ் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி


விருத்தாசலத்தில் பஸ் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2021 8:16 PM GMT (Updated: 2021-02-03T01:46:29+05:30)

விருத்தாசலத்தில் பஸ் மோதி அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப் பேட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 51). இவர் சின்னகண்டியங்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பர் ராமமூர்த்தியுடன்(47) மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பெரியார் நகர் வள்ளலார் குடில் அருகே சென்றபோது, பின்னால் விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

இந்த விபத்தில் கணேசன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த ராமமூர்த்தியை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

அ.தி.மு.க. கிளை கழக பொறுப்பாளராக இருந்த கணேசன், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிறைக்கு சென்ற போது, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story