தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 10:18 PM GMT (Updated: 2 Feb 2021 10:18 PM GMT)

தொழிலாளர் நல சட்ட திருத்தங்களை கண்டித்து ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, 

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகம் முன் நேற்று டி.ஆர்.இ.யு. தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆ்ர்ப்பாட்டத்திற்கு சங்க துணை பொது செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். உதவி கோட்ட செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். 

ரெயில்வே மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது, தொழிலாளர் நல சட்டங்களை திருத்தக்கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், டிக்கெட் பரிசோதகர் நிலையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பவேண்டும், பெண் டிக்கெட் பரிசோதகர்களை பொதுப்பெட்டிகளில் ஈடுபடுத்தக்கூடாது, ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தொழற்சங்க தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி கோட்ட செயலாளர் சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கரிகாலன் உள்பட நிர்வாகிகள் பேசினார்கள்.

Next Story