திருச்சி பொன்மலையில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


திருச்சி பொன்மலையில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 3 Feb 2021 12:00 AM GMT (Updated: 2021-02-03T05:32:49+05:30)

திருச்சி பொன்மலையில் பிளஸ்-1 மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-1 மாணவியை அதே பகுதியை சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி நாகேந்திரன் (வயது 22) காதலித்து வந்தார். இதற்கு மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 28-ந்தேதி மாணவியை சமயபுரத்துக்கு அழைத்து சென்று நாகேந்திரன் திருமணம் செய்துள்ளார். இதுபற்றி அறிந்த சிறுமியின் தாய் பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டம் மற்றும் குழந்ைத கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாகேந்திரனை கைது செய்தனர்.

Next Story