அரசு ஊழியர் சங்கத்தினர் 129 பேர் கைது
அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.பெரம்பலூர்-அரியலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர், பிப்.3-
பெரம்பலூர்-அரியலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 129 பேர் கைது செய்யப்பட்டனர்.
45 பேர் கைது
பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 5,068 பேருக்கு வழங்கப்பட்ட 17பி குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்திடவேண்டும். அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட மாநில துணைத்தலைவர் பெரியசாமி மறியல் போராட்டத்தை தொடங்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஊரகவளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, சத்துணவு ஊழியர்கள், செவிலியர்கள், நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த பெண் ஊழியர்கள் 7 பேர் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 லட்சம்
மேலும் இந்த போராட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கவேண்டும். தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்த்துறை, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பணிநீக்கம் செய்யப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ஊதியம் வழங்கவேண்டும். கொரோனா நோய்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும். மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கிட அறிவித்த அரசாணையை அமல்படுத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டது.
அரியலூரில் 84 பேர் கைது
இதே கோரிக்கைகளை வலியுறுத்திஅரியலூர் அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பஞ்சாபகேசன் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் சாலைமறியல் செய்ய முயன்றபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அரியலூர் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி 84 பேரையும் கைது செய்தனர்.

Related Tags :
Next Story