வீட்டுமனை பட்டா வழங்கியதில் முறைகேடு: 5 வீடுகள் இடித்து அகற்றம்
பென்னாகரம் அருகே ஜங்கமையனூர் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
பென்னாகரம்,
பென்னாகரம் அருகே ஜங்கமையனூர் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 72 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் தகுதியற்ற 5 பேருக்கு வீட்டுமனை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பென்னாகரம் தாசில்தார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி, பழனி, கருவூராள், சரசு, ஞானமணி ஆகிய 5 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் 5 பேரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளாததால் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அனுமதியின்றி கட்டப்பட்ட 5 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன. இந்த பணியை தாசில்தார் சேதுலிங்கம், போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story