ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 3 Feb 2021 5:44 AM GMT (Updated: 3 Feb 2021 5:50 AM GMT)

குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர், 

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. தர்ணாவுக்கு மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மணிவேல் வரவேற்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், வருவாய் கிராம ஊழியர், வனத்துறை காவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 வழங்க வேண்டும். அனைத்து வகை ஓய்வூதியர்களுக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நல சங்க மாநில உதவித் தலைவர் சவுந்தரபாண்டியன் தொடக்க உரையாற்றினார். ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாலசந்திரமூர்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முடிவில் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன் நன்றி கூறினார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story