9-ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்
வேலூர் அருகே மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
வேலூர்
வேலூரை அடுத்த அரப்பாக்கத்தில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் சமூகநலத்துறை, சைல்டுலைன், சத்துவாச்சாரி போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபருக்கும் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.
மாணவிக்கு 18 வயது நிரம்பாததால் அந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அதிகாரிகள் இருதரப்பு பெற்றோரிடமும், மாணவிக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்ய வேண்டும் என்று எழுதி வாங்கினர்.
பின்னர் அந்த மாணவி, குழந்தைகள் நலக்குழுமத்தின் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
Related Tags :
Next Story