நெல்லை-காந்திதாம் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்


நெல்லை-காந்திதாம் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 3 Feb 2021 10:30 PM GMT (Updated: 3 Feb 2021 10:30 PM GMT)

நெல்லை-காந்திதாம் இடையே இன்று முதல் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

நெல்லை,

நெல்லையில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள காந்திதாம் வரையிலும் வியாழக்கிழமைதோறும் சிறப்பு ரெயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நெல்லை-காந்திதாம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 09423) நெல்லையில் இருந்து இன்று (4-ந்தேதி) மற்றும் வருகிற 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் (மார்ச்) 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் நெல்லையில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் மதியம் 2.35 மணிக்கு காந்திதாம் சென்றடையும்.

அதேபோன்று காந்திதாம்-நெல்லை அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்: 09424) திங்கட்கிழமைதோறும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த ரெயில் காந்திதாமில் இருந்து வருகிற 8, 15, 22 ஆகிய தேதிகளிலும், அடுத்த மாதம் (மார்ச்) 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 5, 12, 29, 26 ஆகிய தேதிகளிலும் காந்திதாமில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டு, செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு நெல்லை வந்து சேரும். 
இந்த தகவல், தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story