எடப்பாடி பகுதியில் 2 கோவில்களில் திருட்டு


எடப்பாடி பகுதியில் 2 கோவில்களில் திருட்டு
x
தினத்தந்தி 4 Feb 2021 4:22 AM IST (Updated: 4 Feb 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பகுதியில் 2 கோவில்களில் இருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

எடப்பாடி,

எடப்பாடி மேட்டுதெருவை அடுத்த பள்ளர் தெருவில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. அதேபோல் ஆலச்சம்பாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக எடப்பாடியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தைப்பூச காவடிகள் கட்டி பழனிக்கு பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ சில மர்ம நபர்கள் நள்ளிரவில் இந்த 2 கோவிலுக்குள் இருந்த உண்டியல் பூட்டை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எடப்பாடி போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் எடப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story