அரியலூரில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
அரியலூரில் கெட்டுப்போன மீன்கள், இறைச்சிகளை விற்பனைக்கு வைத்திருந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் நடராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் அரியலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் ஆடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் மீன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நாள்பட்ட, நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏற்கனவே இறந்த ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வது, சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகள், சுகாதாரமற்ற முறையில் இறைச்சி கழிவுகளை திறந்த வெளியில் வீசி எறியும் போக்கு, இறைச்சியை தொங்கவிட பயன்படுத்தப்படும் எளிதில் துருப்பிடிக்கும் தன்மை கொண்ட இரும்பாலான கொக்கிகள் பயன்பாடு, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறாமல் செயல்படும் இறைச்சி கடைகள், தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பயன்பாடு உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அபராதம்
அப்போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 3 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 6 கிலோ நாள்பட்ட மீன்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இது போன்ற ஆய்வு மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளது என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார். இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பொன்ராஜ், சசிகுமார், ஜஸ்டின் அமல்ராஜ், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் முத்துமுகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ரூ.100-க்கு லைெசன்ஸ் எடுத்தவர்கள் ரூ.2 ஆயிரத்துக்கு லைசென்ஸ் எடுக்க வேண்டும். கறிகள் வெட்டப்படும் போது வீணாகும் தேவையற்ற பொருட்களை குழிதோண்டி புதைக்க வேண்டும். பொது இடங்களில் கொட்டக் கூடாது, அவ்வாறு கொட்டினால் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அதுமட்டுமின்றி. முதல் நாள் வெட்டப்படும் கறிகள் மீதமானால் அதனை மறுநாள் விற்கக்கூடாது, அழித்துவிடவேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Related Tags :
Next Story