கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு


கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 4 Feb 2021 11:51 AM IST (Updated: 4 Feb 2021 11:55 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து போலீசார் இடையே உள்ள அச்சத்தைப் போக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் நேற்று தாமாக முன்வந்து அரியலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து போலீசார் அச்சமின்றி கொரேனா தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

Next Story