செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி


செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி
x
தினத்தந்தி 4 Feb 2021 12:16 PM IST (Updated: 4 Feb 2021 12:16 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் செயற்கைகோள் விண்ணில் ஏவும் திட்டத்துக்கு தேர்வு பெற்ற ஆண்டிமடம் மாணவி மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்

ஆண்டிமடம், பிப்.4-
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் வருகிற 7-ந் தேதி அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பில் 100 சிறிய செயற்கை கோள்கள், ராணுவ அமைச்சகத்தின் அனுமதியோடு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நல்லோர் வட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரியில் பயிலும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறையில் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகளை தேர்வு செய்தது. இதில் அரியலூர் மாவட்ட நல்லோர் வட்டம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் ஊராட்சி, தாவடநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்-வள்ளி தம்பதியின் மகள் மோனிஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொது நிர்வாகவியல் துறையில் பயின்று வருகிறார். செயற்கைகோள் ஏவும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவி மோனிஷாவை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இந்த மாணவிக்கு ஆன்லைன் வாயிலாக செயற்கை கோள் உருவாக்கத்திற்கு பயிற்சி அளிக்கப்பட்டதோடு, நேரடி செயல்வழி பயிற்சியும் அளிக்கப்பட்டது. விவசாயம், தீவிர கதிர்வீச்சு, காற்றின் வேகம், புவி வெப்பமடைதல், ஓசோன் குறைவு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு தேவையான தகவல் பெறும் வகையில் இந்த செயற்கை கோள் ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story