போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழுதான டிராக்டர்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழுதான டிராக்டர்கள்
x
தினத்தந்தி 4 Feb 2021 12:22 PM IST (Updated: 4 Feb 2021 12:22 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள பழுதான டிராக்டர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் பிப்.4-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டாள் தெருவில் இயங்கி வந்த வேளான்மை துறை அக்ரோ சர்வீஸ் அலுவலகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அலுவலகத்திற்கு சொந்தமான பழுது அடைந்த 2 டிராக்டர்கள் எடுத்து செல்லப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த டிராக்டர்களின் பாகங்கள் பூமியில் 3 அடி ஆழத்தில் புதைந்த நிலையில் சிதைந்து காணப்படுகிறது. இந்த டிராக்டர்கள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பகல் நேரங்களில் சிறியவர்கள் அதில் விளையாடுவதால் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் அடியில் நகராட்சி குடிநீர் குழாய் செல்வதால், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் அங்கு சிலர் குப்பைகளையும் கொட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த டிராக்டர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து அப்புறப்படுத்தாத பட்சத்தில் அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
1 More update

Next Story