வேலூரில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்
வேலூரில் 3வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்
வேலூரில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 56 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே 3-வது நாளாக இ்ன்றுஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சரவணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய நடைமுறையை தொடர வேண்டும்,
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
பின்னர் அரசு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சத்துவாச்சாரி போலீசார் மறியலில் ஈடுபட்ட 56 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
Related Tags :
Next Story