மாவட்ட செய்திகள்

குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் சென்னை செல்லும் தொண்டர் + "||" + Volunteer going to Chennai in a moped to welcome Sasikala carrying a cooker on his head

குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் சென்னை செல்லும் தொண்டர்

குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் சென்னை செல்லும் தொண்டர்
குக்கரை தலையில் சுமந்தபடி சசிகலாவை வரவேற்க மொபட்டில் தொண்டர் ஒருவர் சென்னை செல்கிறார்.
திருச்சி, 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் சைக்கிள் வடிவேல் (வயது 56). புரோட்டா மாஸ்டரான இவர் அ.ம.மு.க.வில் எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளராக இருந்து வருகிறார். 

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதையடுத்து சைக்கிள் வடிவேல் கட்சி சின்னமான குக்கரை தொப்பி போல் தலையில் அணிந்தபடி அ.ம.மு.க. கொடியுடன் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருச்செங்கோட்டில் இருந்து மொபட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து சேலம், விழுப்புரம், தர்மபுரி, ஓசூர் போன்ற இடங்களுக்கு மொபட்டிலேயே சென்று விட்டு, நேற்று காலை அவர் திருச்சி வந்தார். 

இதையடுத்து திருச்சியில் இருந்து சென்னை செல்வதாகவும், 8-ந் தேதி தமிழகம் வரும் சசிகலாவை வரவேற்க திரளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தானும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து திருச்சியில் இருந்து பெரம்பலூர் சென்றார். பின்னர் அங்கிருந்து தனது பயணத்தை தொடர்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதல்-அமைச்சராகும் மு.க.ஸ்டாலின்: நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் தொண்டர்
மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆக இருப்பதால் நாக்கை அறுத்து கோவில் வாசலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2. "முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும்" - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
முழு ஊரடங்கு நாளான ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
3. தலைமைச் செயலக வளாகத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 ;எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் முக கவசம் அணியாவிட்டால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. ஐ.பி.எல். 2021; சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.