நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்


நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கலெக்டர்
x
தினத்தந்தி 5 Feb 2021 3:47 AM IST (Updated: 5 Feb 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

நெல்லை:

நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

கொரோனா தடுப்பூசி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் 2 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

முதல்கட்டமாக டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு 2-வது கட்டமாகவும் விரைவில் தடுப்பூசி போடப்பட உள்ளது.

கலெக்டர்-போலீஸ் கமிஷனர்

இதற்கிடையே அரசு அதிகாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அரசு அதிகாரிகளுக்கு முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு முதலாவதாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். பின்னர் அரசு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இதுதொடர்பாக கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

பக்க விளைவு இல்லை

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நெல்லை மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் 11 ஆயிரத்து 949 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது. இதில் 418 டாக்டர்கள் உள்பட 2,829 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. அவர்கள் அனைவரும் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு 2-வது கட்ட தடுப்பூசி விரைவில் போடப்படும்.

பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றி முழு நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக நானும் (கலெக்டர்), மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் வருவாய் அலுவலரும் தடுப்பூசி போட்டுக் கொண்ேடாம். தடுப்பூசி போட்டு கொண்ட அனைவருக்கும் பக்கவிளைவு எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் ரவிச்சந்திரன், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story