சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டவர் கைது


சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டவர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 3:51 AM IST (Updated: 5 Feb 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.

அரியாங்குப்பம், 

அரியாங்குப்பம் மணவெளி கலைஞர் நகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தை (பேஸ்புக்) பார்த்தார். அப்போது, பிரதமர் மோடி மற்றும் குறிப்பிட்ட சில சமுதாய தலைவர்கள் பற்றி அவதூறாகவும், கலவரம் ஏற்படுத்தும் வகையிலும் கருத்து பதிவிடப்பட்டு இருந்தது. இது அரியாங்குப்பம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்த தங்கதுரை அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டது அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்த சத்தியானந்தம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைந்தனர்.

Next Story