சேலத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்வு


சேலத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்வு
x
தினத்தந்தி 5 Feb 2021 5:41 AM IST (Updated: 5 Feb 2021 5:43 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்வு.

சேலம்,

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சின்னவெங்காயம் வரத்து குறைந்ததால் அப்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. அதன்பிறகு வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. அதன்படி ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளில் நேற்று சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை உயர்ந்து விற்பனை ஆனது.

இது குறித்து வியாபாரிகளிடம் கேட்ட போது,. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் சேலத்திற்கு விற்பனைக்கு வரும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் வரத்து குறைந்து உள்ளது. இதனால் விலை உயர்ந்து வருகிறது என்று கூறினர்.

Next Story