மரத்தின் நடுவே குலை தள்ளிய அதிசய வாழை
மரத்தின் நடுவே குலை தள்ளிய அதிசய வாழையை பொதுமக்கள் பாா்த்து சென்றனா்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள மேற்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய வீட்டின் தோட்டத்தில் வாழை மரங்கள் வளர்த்து வருகிறார். இதில் ஆறடி உயரம் வளர்ந்த பூவன் வகையை சேர்ந்த ஒரு வாழைமரத்தில் மூன்றடி உயரத்திற்கு மரத்தின் நடுப்பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குைல தள்ளியது. பின்னர் பூவில் இருந்து காய்கள் காய்த்து தற்போது வாழைத்தாராக காட்சியளிக்கிறது. பொதுவாக வாழை மரங்கள் மேற்பகுதியில் இலைகளுக்கு இடையே இருந்தே குலைதள்ளுவது வழக்கம். ஆனால் மரத்தின் இடையே குலை தள்ளிய இந்த அதிசய வாழையை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story