மதுராந்தகம் அருகே கலப்பட ஆயில் தயாரித்த ஆலை கண்டுபிடிப்பு 2 பேர் கைது


மதுராந்தகம் அருகே கலப்பட ஆயில் தயாரித்த ஆலை கண்டுபிடிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 10:29 AM IST (Updated: 5 Feb 2021 10:29 AM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே கலப்பட ஆயில் தயாரித்த ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுராந்தகம், 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட ஆயில் தயாரிப்பதாக மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் மற்றும் தனிப்படையினர் அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அடுத்த கள்ளபிரான் புரத்தில் இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஆயில் கலப்படமாக தயாரிக்கும் ஆலை கண்டு பிடிக்கப்பட்டது.

கைது

அங்கு பணிபுரிந்த திருவேற்காடு பகுதியை சேர்ந்த திருவள்ளுவன் (வயது 48), பரமக்குடியை சேர்ந்த தங்கசாமி (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து டேங்கர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது..

Next Story