உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கான பயிற்சி
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கான பயிற்சி நடந்தது.
கரூர்,
கரூரில் நேற்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் கரூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்கு திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சசிரேகா வரவேற்று பேசினார். இப்பயிற்சியில் உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறை படுத்துவதில் உள்ள புதிய மாற்றங்களை அறிந்துகொள்வது எப்படி மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் புதிய வழிகாட்டல்கள், உணவுக்கான உப்பு பயன்பாட்டில் அயோடின் நுண்சத்தின் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில், நியூட்ரீசன் இண்டர்நேஷனல் திட்ட மேலாளர் சையத் அகமது, உப்பு ஆலோசகர் சரவணன், தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு பெருந்தலைவர் டாக்டர் சொக்கலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story