இருதரப்பினரிடையே தகராறு; 7 பேர் கைது


இருதரப்பினரிடையே தகராறு; 7 பேர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2021 11:44 AM IST (Updated: 5 Feb 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனா்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம்(வயது 45). விவசாயி. இவருக்கும், அதே கிராமத்தில் வசித்து வரும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த காமராஜுக்கும்(45) நிலப்பிரச்சினை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீலமேகத்திற்கும், காமராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நீலமேகம், அவரது மனைவி விஜயலெட்சுமி (40), மகன் நிஷாந்(19) உள்பட 4 பேரும், காமராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் செல்வதுரை(34), பூராசாமி(70) ஆகியோருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். மேலும் இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியே உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 7 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story