வேலூர், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்கம் சார்பில் அலமேலுமங்காபுரத்தில் உள்ள மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பரமசிவம், முன்னிலை வகித்தார். பொது செயலாளர் ரமேஷ் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், 5 ஆண்டுகளாக வழங்காமல் உள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் விஜயன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story