திருச்சியில் மருத்துவ காப்பீடு நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருச்சியில் மருத்துவ காப்பீடு நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி ஏர்போர்ட் குளவால்பட்டி இ.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 42). தொழிலதிபர். இவரும் இவரது குடும்பத்தாரும் திருச்சி பறவைகள் சாலையில் உள்ள பிரபல மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் பணம் கட்டியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது தம்பியின் மனைவிக்கு விபத்தில் காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போது, அவர் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தின் மூலம் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதுபற்றி காப்பீட்டு நிறுவனத்தில் மோகனசுந்தரம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரிவர பதில் கூற மறுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர், தனது குடும்பத்துடன் பறவைகள் சாலையில் உள்ள மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மோகன சுந்தரம் கூறுகையில், இந்த மருத்துவ காப்பீடு நிறுவனத்தில் நான் பணம் செலுத்தி உள்ளேன். விபத்து ஏற்பட்டால் பணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று விளம்பரப்படுத்தியது. ஆனால் தற்போது முன் பணம் செலுத்தினால் மட்டுமே சிகிச்சை பெற முடியும் என்று கூறி வருகிறது என்றார்.
Related Tags :
Next Story