கால பைரவருக்கு சிறப்பு பூஜை; பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு


கால பைரவருக்கு சிறப்பு பூஜை; பக்தர்கள் முளைப்பாரி எடுத்து  வழிபாடு
x
தினத்தந்தி 6 Feb 2021 6:48 AM IST (Updated: 6 Feb 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டனா்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரத்தில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கால பைரவர் கோவில் உள்ளது. கால பைரவருக்கு தைமாத தேய்பிறை அஷ்டமியில் 5-ம் ஆண்டு முளைப்பாரி பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு முளைப்பாரி எடுப்பதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே பக்தர்கள் டோக்கன் பெற்று முளைப்பாரி பூச்சட்டியில் நாற்றுவிட்டு வளர்த்தனர். மேலும் தினமும் 108 ஸ்தோத்திரங்கள் என 11 நாட்கள் கூறினர். 

இதைத்தொடந்து நேற்று முன்தினம் மாலை மேளதாளங்களுடன் ஊர்வலமாக முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். அங்கு பைரவருக்கு பூக்களால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் முளைப்பாரியை விட்டு வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story