அரியலூாில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி
அரியலூாில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது.
தாமரைக்குளம்,
அரியலூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. போட்டிகளை தமிழ்நாடு சிலம்பாட்டக் கழக போட்டி இயக்குனர் விக்டர் குழந்தைராஜ் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார் ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு பிரிவிலும் தனித்திறமைக்கு 3 நிமிடங்கள் வழங்கப்பட்டு, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, சுருள், ஈட்டி, மான் கொம்பு, வாள்க்கேடயம் போன்ற பழைமை வாய்ந்த வீர விளையாட்டுகள் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த மாதம் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story