தா.பழூரில் விற்பனை ஆகாததால் சாலையோரம் வீசப்பட்ட தக்காளிகள்


தா.பழூரில் விற்பனை ஆகாததால் சாலையோரம் வீசப்பட்ட தக்காளிகள்
x
தினத்தந்தி 6 Feb 2021 8:40 AM IST (Updated: 6 Feb 2021 8:42 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூரில் விற்பனை ஆகாததால் தக்காளிகள் சாலையோரம் வீசப்பட்டன.

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் சரக்கு ஆட்டோக்களில் பெட்டி பெட்டியாக தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று கும்பகோணம் பகுதியில் இருந்து ஒரு வியாபாரி தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வாகனத்தை நிறுத்தி தக்காளி வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

முதலில் 2 கிலோ தக்காளியை ரூ.50-க்கு விற்பனை செய்தார். சரியாக விற்பனை ஆகாததால் 3 கிலோ தக்காளி ரூ.50 என்று விற்ற முயன்றார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி விற்பனை நடைபெறவில்லை. இதனால் மிகவும் சோர்ந்து போனார். கடைசியில் 5 கிலோ தக்காளி 50 ரூபாய் என்ற விலையில் விற்றார்.

ஆனாலும் அவர் கொண்டு வந்த தக்காளிகள் விற்பனை ஆகாததால் விரக்தி அடைந்த அவர், வாகனத்துடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் காரைக்குறிச்சி செல்லும் சாலையில் செல்லியம்மன் கோவில் அருகே, விற்காமல் மீதமிருந்த தக்காளிகளை சாலையோரத்தில் வீசிச்சென்றார். விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளி விற்காததால் அவற்றை வியாபாரி சாலையோரத்தில் வீசிச்சென்றதை பார்த்தவர்கள், வேதனை அளிப்பதாக இருந்ததாக தெரிவித்தனர்.

Next Story