போர்வெல் டிரில்லிங் கட்டண உயர்வுக்கான வேலை நிறுத்தம் தொடங்கியது
பெரம்பலூர் மாவட்டத்தில் போர்வெல் டிரில்லிங் கட்டண உயர்வுக்கான வேலை நிறுத்தம் தொடங்கியது.
பெரம்பலூர்,
உயர்ந்து வரும் டீசல் விலை, உதிரி பாகங்கள் விலை, ஆட்கள் கூலி, வாகன காப்பீடு, ஆயுள் மற்றும் சாலை வரி காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள், போர்வெல் டிரில்லிங் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதன்படி போர்வெல் டிரில்லிங் கட்டண உயர்வுக்கான 2 நாள் அடையாள வேலை நிறுத்தத்தை பெரம்பலூர் மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத்தினர் நேற்று தொடங்கினர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் சாலையோரத்தில் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் கவுரவ தலைவர் அரவிந்தன், தலைவர் பால்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அந்த இடத்தின் அருகில் போர்வெல் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் போர்வெல் டிரில்லிங் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை சங்க நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். கூட்டத்தில் நாலே முக்கால் இன்ச் மற்றும் ஆறரை இன்ச் போர் அடிக்கு குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணம், இதர கட்டணங்களுடன் எவ்வளவு வசூலிக்க வேண்டு்ம் என்று முடிவு எடுக்கப்படவுள்ளது என்று அச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story