ஆரணியில் போலீஸ் நிலையத்தை, முஸ்லிம்கள் முற்றுகை


ஆரணியில் போலீஸ் நிலையத்தை, முஸ்லிம்கள் முற்றுகை
x
தினத்தந்தி 6 Feb 2021 6:48 PM IST (Updated: 6 Feb 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

புகார்மனு வாங்க அதிகாரிகள் இல்லாததால் போலீஸ் நிலையத்தை, முஸ்லிம்கள் முற்றுகையிட்டனர்.

ஆரணி

முகமது நபி குறித்து பேசிய பா.ஜ.க.வை சேர்ந்த கல்யாணராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க ஆரணி நகரில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பி.எம். அன்சர் தலைமையில் ஆரணி டவுன் போலீஸ்நிலையத்துக்கு சென்றனர்.

அப்போது இன்ஸ்பெக்டர் உள்பட அதிகாரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் திருவண்ணாமலைக்கு சென்றிருப்பதாக போலீஸ்நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 
இதனால் ஆத்திரமடைந்த அவர்களை போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story