ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல்
ஏரல் அருகே கொலை செய்யப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலு குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி,
ஏரல் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் பாலு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோடு ஆட்டோ ஏற்றி படுெகாலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தலில் உள்ள பாலு வீட்டிற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்றார். பாலுவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சூப்பிரண்டு ஜெயக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் மோகன், யூனியன் துணை தலைவர் லட்சுமணப்பெருமாள், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்தநாள் விழா நடந்தது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்கள்.
இதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா, மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரிசுப்புராஜ், துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரைபாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கணேஷ்பாண்டியன், பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ்சென்ன கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story