சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 7 Feb 2021 1:25 AM IST (Updated: 7 Feb 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்ட ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பில், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில், இருசக்கர வாகனத்தில் 3 ேபர் செல்லக்கூடாது, உரிமம் இன்றி வாகனம் ஓட்டக்கூடாது, காப்புச் சான்று உள்ளிட்ட அனைத்தும் வாகனத்தில் வைத்திருக்க வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து இயக்க வேண்டும், பஸ் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும் வீட்டிலோ அல்லது வெளியிலோ தீ விபத்து ஏற்படும் நேரங்களில் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி விளக்கி கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதில் ஜெயங்கொண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் குணசேகரன், பொறியாளர் சந்தோஷ்குமார், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story